சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ”பாரதிகண்ணம்மா” சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ரிலீசான ‘கருடன்’ திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது ட்ரெண்டியான உடையிலிருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.