Home மாவட்ட செய்திகள்மத்திய மாவட்டம்கரூர் நில மோசடி வழக்கு… சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணை… அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பு…!!

நில மோசடி வழக்கு… சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணை… அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பு…!!

by Revathy Anish
0 comment

100 கோடி நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. நிர்வாகி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். அவர்களது வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு அம்மன் நகரில் வசித்து வரும் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கவின் வீட்டில் சோதனை செய்தனர். இதனையடுத்து கரூர் மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி உறுப்பினர் பசுபதி, செந்தில், என மொத்தம் 7 பேரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இது அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.