184
தமிழ் சினிமாவில் “மெட்ரோ” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் பிஸ்தா, ராஜா ரங்குஸ்கி போன்ற திரைப்படங்கள் வெளியானது. இவர் கிடைக்கும் நல்ல படங்களில் நடித்து வருகிறார்.
இளம் நடிகராக இருக்கும் இவர் கொரோனா காலத்தில் மக்களுக்கு தன்னால் முடிந்த நிறைய உதவிகளை செய்து வந்தார். மேலும், சமூகப் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், இவருக்கு கோலாகலமாக நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. தாலி கட்டும் போது எடுக்கப்பட்ட க்யூட்டான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.