விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார்குறிச்சி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த 9-ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் முருகன், மாரியப்பன் ஆகிய தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த சரோஜா, சங்காரவேல் ஆகிய 2 பேரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலை மேலாளர் பன்னீர்செல்வம் மற்றும் போர் மேன் குணசேகரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.