Home செய்திகள் தாய், மனைவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு… டிரைவர் தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!!

தாய், மனைவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு… டிரைவர் தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!!

by Revathy Anish
0 comment

சென்னை ஆவடி பாரதி நகர் பகுதியில் சத்ய நாராயணன் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த இவர் செல்போன் செயலி மூலம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அவர் அந்த கடனை திருப்பி செலுத்தாததால் அவருக்கு பல செல்போன் எண்களில் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்தது. மேலும் அவரிடம் பேசிய மர்மநபர்கள் ஆபாசமாக பேசியும், கொலை மிரட்டலும் விடுத்து வந்தனர்.

இதனையடுத்து அவர்கள் ஒரு படி மேலே சென்று சத்ய நாராயணன் பெண் ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்றும் அவர் தாயார் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி சத்ய நாராயணனுக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அவர் ஆவடி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனாலும் அந்த மர்ம நபர்கள் தொடர்ந்து அவரது தாய், மனைவி ஆகியோரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி வந்தனர்.

இதனால் விரக்தியடைந்த சத்ய நாராயணன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சத்ய நாராயணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.