Home செய்திகள் உடலுறுப்புகள் தானம் செய்த பெண்… 6 பேர் பயனடைந்தனர்… அரசு மரியாதையுடன் அஞ்சலி…!!

உடலுறுப்புகள் தானம் செய்த பெண்… 6 பேர் பயனடைந்தனர்… அரசு மரியாதையுடன் அஞ்சலி…!!

by Revathy Anish
0 comment

நீலகிரி மாவட்டம் ஊட்டி மேரிஸ்ஹல் பகுதியில் எமிலி(63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர் சிகிச்சை பெற்று வந்த எமிலி திடீரென மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமளிப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மருத்துவர்கள் முறையான அனுமதியுடன் அவரது கண்கள், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை எடுத்து தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் 6 நோயாளிகள் பயனடைந்துள்ளனர். ஏற்கனவே தமிழக அரசு இறக்கும் முன்பு உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் முன்பு எமிலி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது ஆட்சியர் அருணா, மருத்துவமனை முதல்வர், இருப்பிட மருத்துவ அலுவலர், மயக்கவியல் மருத்துவர் கார்த்திக், தாசில்தார் சரவணகுமார் என பலரும் பங்கேற்றனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக எமிலி உடல் உறுப்பு தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.