ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் நடன கலைஞரான பிரவீன் பிரஜாபத் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவர் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான காட் டேலண்ட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பிரவீன் பிரஜாபத் தனது தலையில் 18 கண்ணாடி கிளாஸ்களை அடுக்கி வைத்து அதற்கு மேல் பானையை வைத்து நடனமாடி அசத்தியுள்ளார்.
இதனைப் பார்த்த நடுவர்கள் ஆச்சரியத்தில் வியந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அனைவரும் இளம் நடன கலைஞரான பிரவீன் பிரஜாபத்துக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.