விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியர் சிவா வெற்றியடைந்துள்ளார். அவர் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்டு பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றுள்ளார்.
இதனை அடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் அன்னியூர் சிவா உடனடியாக சென்னை அண்ணா அறிவாலயம் வந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது அவருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.