70
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்து தற்போது நடிகராக களம் இறங்கி இருப்பவர் யோகி பாபு. சுரேஷ் சங்கையா இயக்கும் “கிணத்த காணோம்”என்ற புதிய படத்தில் யோகிபாபு நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை ஜெகன் பாஸ்கரனின் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டூடியோ மற்றும் எஸ்.ஆர். ரமேஷ் பாபுவின் ஆர்.பி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறது. நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.