சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி பகுஜன் சாம்ஜ் கட்சியின் மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் 11 பேரை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் 11 பேரில் திருவேங்கடம் என்பவரிடம் விசாரணை செய்வதற்கு மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்து சென்றனர். அப்போது அவர் போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார். இதனை பார்த்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை 2 முறை சுட்டு என்கவுண்டர் செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் திருவேங்கடம் புழல் பகுதியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும், போலீசாருடன் அங்கு சென்றபோது அவர் போலீசாரை தாக்க முயன்றதால் போலீசார் அவரை எக்கவுண்டரில் கொலை செய்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து திருவேங்கடத்தின் உடல் மாதவரம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் உயிரிழந்த திருவேங்கடம் மீது 3 கொலை வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.