இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை பலரும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படத்திற்காக நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதற்காக இவருக்கு 4 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.