ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிகர் சூர்யாவை கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற அம்பானி இல்ல திருமண விழாவில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் சூர்யாவுடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த பதிவில் ”ஒன்றா இரண்டா ஆசைகள், எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா?” என்ற பாடல் வரிகளையும் எழுதி பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த அழகிய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.