ஒரே இடத்தில் படுத்திருந்த 12 அடி ராஜ நாகம்… பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதி அருகில் உள்ள பாலப்பட்டி கிராமத்தில் ராஜநாகம் ஒன்று படுத்து கிடந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த ராஜ ராகம் ஊர்ந்து செல்ல முடியாமல் ஒரே இடத்தில் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் வீரர்களின் உதவியுடன் அந்த ராஜ நாகத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராடி 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகத்தை பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது ராஜ நாகம் இன சேர்க்கையில் ஈடுபட்டால் இதுபோல் சோர்வுடன் ஒரே இடத்தில் படுத்து இருக்கும் என தெரிவித்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!