செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் 30 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல்… சிறுவனுடன் வெளியூர் தப்ப முயற்சி… மடக்கி பிடித்த பெற்றோர்…!! Revathy Anish16 July 20240120 views சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் 30 வயதான பெண் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதே கடையில் பணிபுரிந்து வரும் 15 வயது சிறுவனுடன் பேசி பழகியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் சிறுவனிடம் காதலிப்பதாக கூறி சிறுவனை தன் வலையில் வீழ்த்தி பல்வேறு இடத்திற்கு சென்று தனிமையில் இருந்து வந்தனர். இதனையடுத்து அந்த பெண் சிறுவனிடம் ஆசை வார்த்தைகள் கூறி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து சிறுவனின் பெற்றோருக்கு சந்தேகம் வந்ததால் யாருக்கும் தெரியாமல் அவரை கண்காணித்து வந்தனர். இதனை அறிந்த அந்தப் பெண் உடனடியாக சிறுவனை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்று விடலாம் என கூறி கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் உடனடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்று சிறுவனை மீட்டனர். இதனைக் கண்ட அந்த பெண் உடனடியாக அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பெண்ணை தேடி வருகின்றனர்.