குடியிருப்புக்குள் புகுந்த கரடி… மரத்திலிருந்து கீழே வராமல் அட்டகாசம்… பொதுமக்கள் அச்சம்…!!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அடிக்கடி வனவிலங்குகள் வந்து செல்வது வழக்கமாகி வருகிறது. சம்பவத்தன்று காலை வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று குடியிருப்புகள் புகுந்தது. அங்கிருந்த தமிழ்நாடு 9-ஆம் அணி பாட்டாலியன் கமாண்டர் வீட்டில் புகுந்து மேலே ஏறி அருகில் இருந்த மரத்தின் மீது ஏறியது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பயத்தில் வீட்டிற்கு சென்று கதவை பூட்டி கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் சில நேரம் போராடி கீழே வராமல் இருந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் கரடி நடவடிக்கைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!