செய்திகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் மரத்தடியில் கிடந்த மது பாட்டில்… குடித்த முதியவர் பரிதாப பலி… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish8 July 2024073 views திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள பத்தாளப்பேட்டை பகுதியில் அண்ணாதுரை(70) என்பவர் வசித்து வந்துள்ளார். பாத்திரம் அடைக்கும் தொழிலாளியான இவருக்கு ஜெயா(60) என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று ஜெயாவின் சகோதரி மகளான பூங்கோடி என்பவர் அப்பகுதியில் உள்ள மரத்தடியில் டப்பாவுடன் மது பாட்டில் ஒன்று கிடந்ததாக கூறி அதனை எடுத்து அண்ணாதுரையிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கி கொண்டு வீட்டு மாட்டு கொட்டகைக்கு சென்ற அண்ணாதுரை வெகு நேரமாகியும் வராததால் ஜெயா அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் மது பாட்டிலில் இருந்ததை பாதி குடித்து விட்டு மயங்கிய நிலையில் இருந்தார். அந்த இதனை பார்த்த ஜெயா மற்றும் அவரது மகன் ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அண்ணாதுரை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு அவர் குடித்த மதுவில் விஷம் ஏதும் கலக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.