தேரின் மீது மோதிய கார்… மது அருந்தியதால் விபரீதம்… ராஜபாளையத்தில் பரபரப்பு…!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜெய் கணேஷ்(25) என்பவர் அவரது நண்பர்களுடன் சிவகிரிக்கு சென்ற நிலையில் அங்கு வேலை முடிந்ததும் மீண்டும் காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர பாரில் ஜெய் கணேஷ், வனராஜ், சுப்புராஜ், மகேஷ் ஆகியோர் மது அருந்திவிட்டு மீண்டும் தென்காசிக்கு புறப்பட்டனர்.

இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் தேவதானம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜெய் கணேஷ் மது போதையில் தாறுமாறாக காரை இயக்கியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பிரசித்தி பெற்ற நாச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேரின் மீது மோதியதில் ஜெய்கணேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது நண்பர்களான வனராஜ், சுப்புராஜ், மகேஷ் ஆகியோர் பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தேவதானம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேரின் மீது கார் மோதியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!