இராமநாதபுரம் செய்திகள் மாவட்ட செய்திகள் திடீரென வெடித்த செல்போன்… பைக் ஒட்டிய வாலிபர் பலி… உயிர் தப்பிய நண்பர்…!! Revathy Anish22 July 20240109 views ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த ரஜினி என்ற இளைஞர் 2 சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. செல்போனை எடுக்க ரஜினி முயற்சித்த போது திடீரென அந்த செல்போன் வெடித்து சிதறி உள்ளது. இந்த செல்போன் வெடித்ததில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற ரஜினி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ரஜினியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.