இராமநாதபுரம் செய்திகள் மாவட்ட செய்திகள் பெற்றோர் சம்மதத்திற்காக காத்திருந்த ஜோடி… கடையில் எடுத்த விபரீத முடிவு…!! Revathy Anish24 July 20240114 views ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரும் பரமக்குடியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி காதலில் உறுதியாக இருந்தனர். ஆனாலும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்த அவர்கள் பலமுறை தங்களது பெற்றோர்களிடம் கேட்டனர். ஆனாலும் பெற்றோர்கள் சம்மதிக்காததால் மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் இருவரும் அவரவர் வீட்டில் ஒரே நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.