கடலூர் செய்திகள் மாவட்ட செய்திகள் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப நிர்வாகி வீட்டிலும் சோதனை… சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள்தகவல்…!! Revathy Anish11 July 20240145 views 100 கோடி நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. நிர்வாகி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் தற்போது அவரது ஆதரவாளர்கள் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு அம்மன் நகரில் வசித்து வரும் கவின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.