பிறந்த நாள் கொண்டாடிய பிரபல ரவுடி… சுட்டு பிடித்த போலீசார்… செங்கல்பட்டில் பரபரப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், இளந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் பிரபல ரவுடி சத்யா என்பவர் பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சீர்காழி பகுதியை சேர்ந்த இவர் கொலை மற்றும் பல குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் இவரை தேடி வந்தனர். இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த சத்யாவை பிடிக்க போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது போலீசார் தன்னை பிடிக்க வருவதை அறிந்த சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும் மாமல்லபுரத்தை சுற்றிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது காரில் தப்பிக்க முயன்ற சத்யாவை சுற்றிவளைத்த போது அவர் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் அதிகாரிகள் சத்யாவின் காலில் துப்பாக்கியால் சுட்டனர்.

இதை தொடர்ந்து சத்யாவை பிடித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தப்பியோடிய ரவுடி சத்யாவின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!