செய்திகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் திடீரென கத்தியால் தாக்கிய கும்பல்… பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்… ஸ்ரீரங்கம் அருகே பரபரப்பு…!! Revathy Anish8 July 2024076 views திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவளர்சோலை பகுதியில் வசித்து வரும் நெப்போலியன் என்பவர் நேற்று தனது நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென நெப்போலியன் மற்றும் அவரது நண்பர்களை கத்தியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நெப்போலியன் உள்பட 6 பேருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் நெப்போலியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு இந்த தாக்குதலில் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நெப்போலியனை தாக்கிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.