செய்திகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் காதலால் ஏமாறிய சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போக்சோவில் வாலிபர் கைது…!! Revathy Anish8 July 2024073 views திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் மாரியம்மன் கோவில் தெருவில் விக்னேஸ்வரன்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் விக்னேஸ்வரன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்பமாக்கியுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக முசிறி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.