Home செய்திகள் பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவி… வீட்டில் நடந்த பயங்கரம்… திருப்பூர் அருகே கொலை…!!

பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவி… வீட்டில் நடந்த பயங்கரம்… திருப்பூர் அருகே கொலை…!!

by Revathy Anish
0 comment

திருச்சி இடையாத்திமங்கலம் பகுதியில் சிவக்குமார்-நர்மதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குரு பிரசாத்(8) என்ற மகனும், ரித்திகா(6) என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நர்மதா கடந்த 3 வருடங்களாக கணவனை பிரிந்து திருப்பூர் ஓலப்பாளையம் அருகே சுக்குட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நூல் மில் குடியிருப்பில் குழந்தைகளுடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சிவக்குமாரும் அவ்வப்போது குழந்தைகளை பார்ப்பதற்காக அங்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று சிவகுமார் தன் மகன் குரு பிரசாத்தின் பிறந்த நாளை கொண்டாட நர்மதா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பிறந்தநாள் முடித்துவிட்டு சிவகுமார் அங்கேயே தங்கியுள்ளார். மறுநாள் அதிகாலையில் சிவகுமாருக்கும் நர்மதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவகுமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

மேலும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்று காங்கேயம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனை அறிந்த போலீசார் சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைந்தனர். இதை தொடர்ந்து நர்மதா உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.