செய்திகள் தேனி மாவட்ட செய்திகள் புதரில் இருந்து பாய்ந்த சிறுத்தை… வனக்காப்பாளர் காயம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்…!! Revathy Anish25 August 2024092 views தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வனக்காப்பாளர் ரகுராம் அவர் கையில் வைத்திருந்த லத்தியை எடுத்து புதரில் தட்டியபடி சென்றார். அப்போது புதரின் நடுவே ஒளிந்து கொண்டிருந்த சிறுத்தை ஆக்ரோஷமாக வெளியேறி ரகுராமை தாக்கி விட்டு மீண்டும் புதருக்குள் சென்று பதுங்கியது. இதை பார்த்த வனத்துறையினர் ரகுராமை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துணையினர் ஆகியோரும் சேர்ந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கம்பம் பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் சிறுத்தை பிடிக்கும் வரை இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கம்பம் 1-வது வார்டு கோம்பை ரோடு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிறுத்தையை பிடிக்கும் பணியை தீவிர படுத்த வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை இன்று காலை மீண்டும் வனப்பகுதிக்குள் நுழைந்தது. சிறுத்தை சென்ற வழித்தடத்தை வனத்துறையினர் பின்பற்றி வருகின்றனர்.