செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள் வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை… பொதுமக்கள் அச்சம்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish19 August 20240112 views நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்துள்ள கல்லக்கொரையில் உள்ள குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை அங்கிருந்த வீட்டின் வளாகத்தில் நுழைந்து வாசலில் கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை கடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வனவிலங்குகள் குடியிருப்புக்குள் நுழைவது தொடர்கதை ஆகி வருவதால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் வனப்பகுதிக்குள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், வன விலங்குகள் குடியிருப்புக்குள் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.