இருசக்கர வாகனத்தில் மோதிய லாரி… துடிதுடித்து பலியான மாணவி… லாரி டிரைவர் கைது…!!

சென்னை செனாய் நகரில் பி.எச்.டி. வேதியியல் 2ஆம் ஆண்டு படித்து வரும் ஆர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது தோழி ரேணுகாதேவியுடன் இருசக்கர வாகனத்தில் அடையாறு சென்றிருந்தார். இந்நிலையில் அவர்கள் காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி திடீரென இருசக்கரவாகனம் மீது மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் ஆர்த்தி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். மேலும் அவரது தோழி ரேணுகாதேவி லேசான காயங்களுடன் தப்பினார். இதனையடுத்து ஆர்த்தியை அங்கிருந்தவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மாடசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!