கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் இரவில் கேட்ட சத்தம்… கதவை உடைத்த யானை… மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை…!! Revathy Anish26 June 2024075 views கோவை மாவட்டம் செம்மேடு பகுதியில் வசித்து வந்த ருக்குமணி(70) என்பவர் தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஈஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு ஈஸ்வரின் கதவை யாரோ உடைப்பதுபோல ருக்குமணிக்கு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர் வெளியே சென்றுள்ளார். அங்கு வெளிச்சம் ஏதும் இல்லாததால் ருக்குமணி ஈஸ்வரியின் வீட்டிற்கு அருகே சென்றார். அப்போது அங்கு ஈஸ்வரியின் வீட்டு கதவை உடைத்து கொண்டிருந்த யானையை பார்த்து பயத்தில் தப்பியோட முயன்றுள்ளார். அதற்குள் அந்த யானை ருக்குமணியை அருகிருந்த சாக்கடையில் தும்பிக்கையை வைத்து தள்ளியது. மேலும் யானையின் சத்தம் கேட்ட பயத்தில் வெளிய வராமல் இருந்த ஈஸ்வரி யானை அங்கிருந்து சென்ற பிறகு படுகாயம் அடைந்த ருக்மணியை அப்பகுதியினரின் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது ருக்குமணி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.