செய்திகள் தருமபுரி மாவட்ட செய்திகள் கூட்டுறவு கடன் சங்கத்தில் நுழைந்த நபர்… 4 பேர் காயம்… வெளியான வீடியோவால் பரபரப்பு…!! Revathy Anish18 July 2024089 views தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் அருகே உள்ள ஒடப்பட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியப்பன் என்ற சகோதரர் உள்ளார். அண்ணன் தம்பி இருவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை இரண்டாக பிரித்து அதில் விவசாயம் செய்து வந்தனர். அதில் பெருமாள் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தானமாக வழங்கியுள்ளார். அந்த இடத்தில் 1998 ஆம் ஆண்டில் இருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முனியப்பன் மகன் மணி என்பவர் அடிக்கடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு வந்து இந்த இடம் என் தந்தைக்கு சொந்தமானது எனவும், நீங்கள் இதை காலி செய்து கொடுங்கள் என அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று அதே போல் மணி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்து இந்த இடத்தை காலி செய்யுங்கள் என கூறி அலுவலக ஊழியர்களை திருப்புளி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் 4 ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மணியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியானது. இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.