பேருந்தின் மீது விழுந்த மின் கம்பி… துரிதமாக செயல்பட்ட டிரைவர்… விபத்து தவிர்ப்பு…!!

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருப்பரங்குன்றம் சாலையில் சென்றபோது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பி ஒன்று அறுந்து பேருந்து மீது விழுந்தது. இதை அறிந்த டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து அறுந்து கிடந்த மின் கம்பியை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!