தண்டவாளத்தில் விழுந்த பாறை… டிரைவரின் சாமர்த்தியம்… பயணிகளிடையே பரபரப்பு…!!

குருவாயூரில்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் செங்கோட்டை, தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று குருவாயூரில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட ரயில் மதியம் 3 மணி அளவில் செங்கோட்டை தென்மலை-கழுதுருட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பாறை ஒன்று உருண்டு வந்து தண்டவாளத்தின் மீது விழுந்தது. இதனை பார்த்த எஞ்சின் துரிதமாக செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.

இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் விழுந்த பாறையை அகற்றினர். இதனால் 1 மணி நேரம் ரயில் தாமதமானது. இச்சம்பவம் ரயிலில் இருந்த பயணிகளிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!