உலக செய்திகள் செய்திகள் திடீரென விழுந்த பள்ளி கட்டிடம்… 22 மாணவர்கள் உயிரிழப்பு… 134 பேர் படுகாயம்…!! Revathy Anish13 July 2024078 views ஆப்பிரிக்க நாடான நைஜீரியா ஜோஸ் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் 2-வது மாடி கட்டிடம் திடீரென இடிந்து கீழே விழுந்துள்ளது. இந்த இடர்பாடுகளில் வகுப்பறைகளில் இருந்த 154 மாணவர்கள் சிக்கினர். அதில் 134 மாணவர்களை காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனால் சுமார் 22 மாணவர்கள் இடர்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். தற்போது காயமடைந்த மாணவர்கள் அப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்போவதாக ஆப்பிரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை தகவல் ஆணையர் மூஸா அஷோம்ஸ் வெளியிட்டுள்ளார்.