ஒரே ஒரு மாணவியுடன் செயல்பட்ட பள்ளி… தற்காலிக மூடல்… கல்வித்துறை அதிகாரிகள் தகவல்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கடம்பூர் பகுதியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கை விகிதம் மிகவும் குறைந்த நிலையில் சென்ற கல்வி ஆண்டில் ஒரே ஒரு மாணவி மட்டும் அங்கு படித்து வந்துள்ளார். தற்போது அந்த பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு படித்த மாணவியை அருகில் உள்ள குறுந்தன்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளனர். மேலும் கடம்பூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால் மீண்டும் அந்த பள்ளி திறக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!