செய்திகள் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் விடுமுறையில் ஒரு குட்டி டூர்… கொடைக்கானலுக்கு படையெடுத்த மக்கள்…!! Revathy Anish14 July 20240133 views திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது சனி மற்றும் ஞாயிறு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை தினம் என்பதால் பல மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகின்றனர். அதிலும் குறிப்பாக நம் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா வாகனங்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளது இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாவின் அப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி, குதிரை சவாரி, சைக்கிள் சவாரி போன்றவற்றில் பயணம் செய்து மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து குணாகுகை, தூண்பாறை, தொப்பி தூக்கி பாறை, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இயற்கை அழகை கண்டு களித்தனர். மேலும் சுற்றுலாவினர் வருகையால் அப்பகுதியில் கடை வியாபாரங்களும், உணவக உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.