கள்ளக்குறிச்சி செய்திகள் மாவட்ட செய்திகள் பிணமாக தொங்கிய அக்கா-தங்கை…சோகத்தில் மூழ்கிய கிராமம்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish19 July 20240118 views கள்ளக்குறிச்சி சின்னசேலம் ராயப்பனூர் பகுதியில் பழனியம்மாள்(60) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். பழனியம்மாளுடன் அவரது அக்காளான செல்லம்மாள் என்பவர் கடந்த 50 வருடங்களாக வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தனர். சம்பவத்தன்று காலையில் வெகு நேரமாகியும் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் அதே பகுதியில் வசித்து வரும் பழனியம்மாள் மகன் ஸ்ரீ வினோத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற அவர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பழனியம்மாள் மற்றும் செல்லம்மாள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து இவருடைய உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அக்கா-தங்கை இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.