செய்திகள் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் தகாத முறையில் ஈடுபட்ட வாலிபர்…பேருந்தில் வைத்து தர்மஅடி கொடுத்த பயணிகள்…!! Revathy Anish25 July 2024074 views நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று நெல்லைக்கு ஏசி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவருக்கு பின்னால் அமர்ந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் வாலிபரை கண்டித்துள்ளார். இதனை பார்த்த பேருந்தில் இருந்த பயணிகள் வாலிபருக்கு தர்ம அடி ,கொடுத்தனர். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் அளித்த தகவலின் படி முன்னீர் பள்ளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் விருதுநகர் மாவட்டம் பள்ளம்பட்டியை சேர்ந்த மாரிகனி(32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.