நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வாலிபர்… பப்பில் வைத்து திடீர் மரணம்… போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த முகமது சுகைல்(22) என்பவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கி எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது பெண் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பப்பிற்கு சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது சுகைல் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனை பார்த்த அவரது நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியில் முகமது சுகைல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!