இராணிப்பேட்டை செய்திகள் மாவட்ட செய்திகள் தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… மருத்துவமனையில் வைத்து நடந்த திருமணம்…!! Revathy Anish26 July 2024087 views ராணிப்பேட்டை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் தினேஷ்(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தினேஷிற்கு கரிக்கதாங்கல் பகுதியை சேர்ந்த லாவண்யா(19) என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இவர்களுக்கு நேற்று ரத்தினகிரி முருகன் கோவிலில் திருமணம் நடத்த முடிவு செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ் திடீரென இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் நேற்று முன்தினம் வீட்டில் எறும்பு பொடியை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர் தினேஷை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை சமாதானம் செய்து வைத்த 2 தரப்பு குடும்பத்தினர் தினேஷ் மற்றும் லாவண்யாவிற்கு ஆற்காடு அரசு மருத்துவமனையில் வைத்து நேற்று திருமணம் நடத்தி வைத்தனர். தற்போது அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.