ஆடி பெருந்திருவிழா… கள்ளழகர் கோவிலில் தேரோட்டம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!!

108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரை மாவட்டத்தில் இருக்கும் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் மிகவும் பிரசித்தி நிகழ்வாக ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13 -ஆம் தேதி கொடியை ஏற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் கள்ளழகர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். மேலும் நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 23ஆம் தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த திருவிழா ஆகஸ்ட் 4-ஆம் தேதி நிறைவு பெறுவதாக கோவில் நிர்வாகமும், அரங்காவலர் குழுவும் தெரிவித்துள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!