செய்திகள் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் கருவில் பெண் குழந்தை இருந்ததால் கருக்கலைப்பு… உயிரிழந்த பெண்…!! Revathy Anish16 August 2024097 views புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராதியில் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கர்ப்பமான பெண் ஒருவருக்கு கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை கண்டறிந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளனர். அப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கருக்கலைப்பு செய்த மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரியும், பெண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.