கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் அபுதாபிக்கு இனி ஈஸியா போலாம்… இண்டிகோ நிறுவனத்தின் அறிவிப்பு… பயணிகள் மகிழ்ச்சி…!! Revathy Anish19 July 2024095 views கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவைகள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதற்க்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இண்டிகோ நிறுவனம் மூலம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியில் இருந்து கோயம்புத்தூர்-அபுதாபி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த விமானங்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என வாரத்தில் 3 நாட்கள் இயங்க உள்ளது. மேலும் இந்த விமானத்தின் மூலம் பயணிகள் அபுதாபியில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்ல உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கோவையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.