போதைப் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்துவரும் நிலையில் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த வாரம் மூன்று வாலிபர்கள் கஞ்சா விற்பனையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்தார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
அதன் அடிப்படையில் வணியம்பணி பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களின் பைகளை ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அப்போது 7 மாணவர்களில் பைகளில் சிறிய வெள்ளை நிற பையில் ஒரு வகை போதைப்பொருள் இருந்தது. அதனை ஆசிரியர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் 7 மாணவர்களை ஒருவாரம் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.