நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்… பொதுமக்கள் போராட்டம்… திருப்பூர் சாலையில் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் ஊராட்சியில் ஜி.என் கார்டன் பகுதி உள்ளது. அப்பகுதியில் தெருவிளக்கு, தண்ணீர், சாலை வசதி என அடிப்படை வசதிகள் கூட இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து அவர்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாச்சிபாளையம் திருப்பூர்-காங்கேயம் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த அவிநாசி பாளையம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடக் கூறினர். மேலும் அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கூறியதை பின்பு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சற்று பரபரப்பு நிலவியது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!