அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கு… 3 வாலிபர்கள் அதிரடி கைது… இறுதி ஊர்வலத்தில் போலீஸ் குவிப்பு…!!

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் வசித்து வந்த அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மற்றும் கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் என்பவர் நேற்று மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கடலூர் மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி பிரபு மற்றும் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் புஷ்பநாதனை கொலை செய்தது அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ், நேதாஜி, அஜய் ஆகிய 3 பேர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்து போலீசார் போலீசார் நடத்திய விசாரணையில் புஷ்பநாதனுக்கும், வாலிபர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததால் திட்டமிட்டு அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

இதனை அறிந்த புஷ்பநாதனின் உறவினர்கள் கைதான வாலிபர்களின் வீட்டிற்கு சென்று பொருட்கள் அனைத்தையும் உடைத்து சேதப்படுத்தினர். மேலும் புஷ்பநாதன் இறுதி ஊர்வலத்தில் கலவரம் ஏதேனும் நிகழாமல் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!