சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் அதிமுக கிளைச்செயலாளர் ரவி வசித்து வருகிறார். நேற்று இரவு நடை பயிற்சிக்காக வெளியே சென்ற ரவி வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை ரவி ஆத்தூர் பகுதியில் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் ரவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரவி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.