செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள் வானிலை நீலகிரிக்கு இன்றும்அலர்ட்டா… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!! Revathy Anish19 July 20240480 views மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஒடிசா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அங்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து கோவையில், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.