செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள் எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்…? காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் தகவல்…!! Revathy Anish18 July 2024074 views மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 அல்லது 2 நாட்களில் ஒடிசா கடற்கரையை அடைய கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் கன மழை முதல் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து கோவையில் ஆரஞ்சு அலர்ட்டும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் கோவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.