செய்திகள் மாநில செய்திகள் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி…? விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்… சீமான் பேட்டி…!! Revathy Anish19 August 20240116 views சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு எனது தம்பி விஜய் அடுத்த செப்டம்பர் மாதம் கட்சிப் பணிகளை ஆரம்பிக்க உள்ளார். வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அவருடன் கூட்டணி வைப்பது குறித்து அப்போதுதான் ஆலோசனை நடத்த வேண்டும். மேலும் தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.