செய்திகள் தருமபுரி மாவட்ட செய்திகள் 37 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி… ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி…!! Revathy Anish24 August 20240111 views கடந்த மாதத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையினால் கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 16-ஆம் தேதி முதல் ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றில் பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கடந்த 37 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. மீண்டும் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. எனவே ஒக்கேனக்கலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றில் குளித்து வருகின்றனர்.