செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் அம்மா உணவகம்… நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர்… தரம் குறித்து கேட்டறிந்தார்…!! Revathy Anish19 July 20240111 views சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளின் தரம், சுகாதாரம் என ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த நபர்களிடமும் உணவின் தரம் குறித்தும் கேட்டார். அப்போது முதலமைச்சருடன் அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.